September 2, 2015

லண்டனில் இருந்து பிரான்ஸ் சென்ற ரயிலில் நடந்த கொடூரம்: ஈழத் தமிழர்கள் சிக்கி தவித்த விதம்!

லண்டனையும் பிரான்ஸ் நாட்டையும் இணைக்கும் கடலுக்கு அடியிலான சுரங்க ரயில் பாதையில் 5 மணி நேரம் சிக்கித் தவித்த மக்கள். இதில் பல ஈழத் தமிழர்களும் அடங்குகிறார்கள். மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதே
இதற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் அகதிகள் சிலர் ரயிலின் கூரை மேல் ஏறி பயணித்ததால் தான் இவ்வாறு நடந்தது என்கிறார்கள் சக பயணிகள். நேற்று இரவு என்ன நடந்தது என்று விவரிக்கிறார் கலைச்செல்வன்..
யூரோ ஸ்ரார் ரயில்(EURO STAR) தொடர்பாக நான் அனைவரும் அறிந்திருப்போம். பிரித்தானியாவில் இருந்து கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை ஒன்றை அமைத்து , குறித்த ரயில் பிரான்ஸ் நாட்டையும் லண்டனையும் பயணப் போக்குவரத்தில் இணைக்கிறது. லண்டனில் இருந்து பிரான்ஸ் செல்ல 35 அல்லது 40 நிமிடங்கள் மட்டுமே பிடிக்கும். இன் நிலையில் பிரான்சில் உள்ள கலை என்னும் இடத்தில் ஆயிரக்கணக்கான வேற்று நாட்டு அகதிகள் முகாமிட்டுள்ளார்கள். இவர்களின் ஒரே லட்சியம் லண்டனுக்குள் வருவது தான். அதற்காக இறந்தால் கூட பரவாயில்லை என்பது இவர்களின் நிலையாக உள்ளது. இவர்களில் சிலர் இந்த யூரோ ஸ்ரார் ரயிலின் கூரை மேல் ஏறி படுத்து விட்டார்கள்.
குறித்த ரயில் நேற்றைய தினம் இரவு புறப்பட்டு ,பிரித்தானியா நோக்கி வந்துகொண்டு இருந்தவேளை, அதிகாரிகள் எப்படியே இதனை அறிந்து விட்டார்கள். ரயிலை கொண்டுவந்து பிரித்தானியாவில் சேர்த்து விட்டு பின்னதாக இந்த விடையத்தை அவர்கள் டீல் செய்து இருக்கலாம். ஆனால் அதனை விடுத்து சுரங்கப் பாதையின் நடுவே ரயிலை நிறுத்திவிட்டார்கள். இதனால் கடும் வெப்பம் , காற்று இல்லாமல் மக்கள் அவதியுற்று மயக்கமடையும் நிலைக்கு கூட தள்ளப்பட்டு உள்ளார்கள். ஒன்று அல்ல இரண்டு அல்ல சுமார் 5 மணி நேரமாக இந்த சுரங்க ரயில் சுரங்கப் பாதைக்குள் தரித்து நின்றுள்ளது. அதிகாரிகள் வந்து ஒவ்வொரு அகதிகளையும் கைது செய்து கூட்டிச் சென்றுள்ளார்கள். ஒரு அகதி கூட லண்டனுக்குள் காலடி வைக்க கூடாது என்பதில் இவர்கள் கவனமாக இருந்துள்ளார்கள்.
தாம் பிள்ளைகளோடு சென்றதாகவும். அனைவரும் பயந்து நடுங்கிய வண்ணம் இருக்க நேர்ந்ததாகவும் ஈழத் தமிழர்கள் விபரித்துள்ளார்கள். இலங்கையில் சிங்கள ராணுவம் குண்டு போடும்போது எவ்வாறு பயம் ஏற்படுமோ அதுபோல தாம் இருந்ததாக அவர்கள் மேலும் விபரித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment