இனஅழிப்பிற்கான சர்வதேச நீதிவேண்டி வட-கிழக்கு தமிழர் தாயகமெங்கும் போராட தமிழ் மக்கள் தயாராகிவருகின்றனர். அந்த வகையில் முதற்கட்ட போராட்டமாக யாழ்.பல்கலைக்கழகத்தினில் தமிழ் மக்களது எதிர்பார்ப்பினை
வெளிப்படுத்தும் கையெழுத்து போராட்டம் 04.09.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகவுள்ளது.வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மத தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வினில் பங்கெடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நீதி வேண்டி இப்போராட்டங்களுக்கு யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,மாணவர் ஒன்றியம்,சிவில் சமூகம்,பொது அமைப்புக்கள்,அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையம்,வெகுஜன அமைப்புக்கள்,காணாமல் போனோர் பாதுகாவலர் சங்கம்,உள்ளுர் அமைப்புக்கள் மற்றும் மகளிர் அமைப்புக்கள் இதற்கென களத்தினில் குதித்துள்ளனர்.
No comments:
Post a Comment