September 2, 2015

வட-கிழக்கு தமிழர் தாயகமெங்கும் மீண்டும் போராட தயாராகின்றது தமிழர் தாயகம்!

இனஅழிப்பிற்கான சர்வதேச நீதிவேண்டி வட-கிழக்கு தமிழர் தாயகமெங்கும் போராட தமிழ் மக்கள் தயாராகிவருகின்றனர்.அமெரிக்கா உள்ளக விசாரணை பற்றி பிரஸ்தாபித்துள்ள நிலையினில் சர்வதேச விசாரணை அதனூடாக நீதி வேண்டி இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
www.tamilarul.com
யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்,மாணவர் ஒன்றியம்,சிவில் சமூகம்,பொது அமைப்புக்கள்,அரச சார்பற்ற அமைப்புக்களின் இணையம்,வெகுஜன அமைப்புக்கள்,காணாமல் போனோர் பாதுகாவலர் சங்கம்,உள்ளுர் அமைப்புக்கள் மற்றும் மகளிர் அமைப்புக்கள் இதற்கென களத்தினில் குதிக்கின்றன.
www.tamilarul.com
வட-கிழக்கெங்கும் இனஅழிப்பிற்கான சர்வதேச நீதிவேண்டி போராடும் அமைப்புக்களை கட்டமைப்பது தொடர்பான முதலாவது கூட்டம் இன்று யாழினில் இடம்பெற்றிருந்தது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதற்கான அழைப்பினை விடுத்திருந்தது.
www.tamilarul.com
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரினை தேசிய இணைப்பாளராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ்.மாவட்ட பிரிவிற்கு கலைப்பீடாதிபதி வி.பி.சிவநாதன்,தலைவராக தெரிவாகயிருந்தார்.பதிவு இணையச் செய்தி
www.pathivu.com
அமைப்பின் உத்தியோக பூர்வ பெயர் அறிமுகம் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் போராட்டங்கள் தொடர்பினில் நாளை வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஊடகவியலாளர் மாநாட்டின் மூலம் அறிவிக்கப்படவுள்ளது.
www.tamilarul.com
இதனிடையே எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ் மக்களது எதிர்பார்ப்பினை வெளிப்படுத்தும் கையெழுத்து போராட்டம் யாழ்.பல்கலைக்கழகத்தினில் ஆரம்பமாகவுள்ளது. வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மத தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வினில் பங்கெடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
www.tamilarul.com
வடகிழக்கின் அனைத்து மாவட்டங்கள் தோறும் இனஅழிப்பிற்கான சர்வதேச நீதிவேண்டி போராடும் கிளை அமைப்புக்களினை தோற்றுவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதுடன் இம்மாத இறுதியினில் அறிக்கை வெளியிடப்படும் வேளை மிகப்பெரும் ஜனநாயகப்போராட்டங்களை முன்னெடுக்க அனைத்து தரப்புக்களும் திடசங்கற்பம் பூண்டுள்ளன.www.tamilarul.com

No comments:

Post a Comment