புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது இந்நாட்டின் அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு மத்திய அரசின் ஒரு பகுதியாக இருக்கும் சந்தர்ப்பம் உருவாவாதாக அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியுடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு உடன்பட்டுள்ளது.
ஆகையால் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே கிடைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குமார வெல்கம எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று 56 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment