மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பாலேந்திரன் ஜெயகுமாரி இன்று புதன்கிழமை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் பொலிஸ்
நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இந்த தகவல் பொலிசாரினால் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தனது மூன்று மகன்களில் எஞ்சி இருந்த மூன்றாவது மகனும் இறுதி யுத்தத்தில் காணாமல் போய் அவரை தேடும் போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, 2014 மார்ச் 12 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பூசா சிறையில் அடைக்கப்பட்ட ஜெயகுமாரி பின்னர் 2015 மார்ச் 10 ஆம் திகதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தனது மகள் விபூசிகாவை நீதிமன்ற அனுமதி பெற்று கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் தங்கவைத்து படிக்கவைத்து தானும் கிளிநொச்சியில் இருந்து அவருக்கு ஆதரவாக வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் மற்றொரு சம்பவத்தை காரணம் கட்டி பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
தன்னைப்போல எத்தனையோ தாய்மார்கள் தமது பிள்ளைகளை தேடி அலைகிறார்கள் என்றும் தமது பிள்ளைகளை பார்ப்பதற்கு அரசாங்கம் ஒரு இடத்தை தெரிவு செய்து தாம் அங்கு சென்று அவர்களை பார்ப்பதற்கேனும்கேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயகுமாரி சில மாதங்கள் முன்னர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

No comments:
Post a Comment