மாத்தறை, வல்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது கைக்குண்டுடன் நபரொவரை, நேற்று செவ்வாய்க்கிழமை (01) பகல் 12.45 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர், கொட்டாவ பகுதியைச் சேர்ந்த 27 வயதானவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த நபர், கடந்த மே 26ஆம் திகதி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலி களவாடியமை மற்றும் ஓகஸ்ட் 01ஆம் திகதி வீடொன்றில் துப்பாக்கிசூடு நடத்தியமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரை மாத்தறை மேல் நீதி மன்றத்தில் இன்று புதன்கிழமை (02) ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment