கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஜூட் பிரியந்த பிரான்சிஸ் எனும் சந்தேகநபரை கைது செய்ய, பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி, புளுமெண்டல் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் இல. 75/51 பீ முதலாவது குறுக்கு சந்து, டெம்பொல் வீதி, கல்கிஸ்ஸ மற்றும் 15 ஏ 19 வெலிகம்பிடிய, ஜா-எல ஆகிய முகவரிகளில் தங்கியிருந்துள்ளார்.
எனவே இவர் குறித்து தகவல் அறிந்தவர்கள் 0718 591 753 அல்லது 0718 591 770 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment