August 31, 2015

அம்மா பொலிசுக்குப் போகாதே!! நெற்றில கேவலமா எழுதுவாங்கள்!! காதலனுடன் ஓடிய மாணவி!

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிந்த கையுடன் தனது 34 வயது காதலனுடன் தலைமறைவாகியுள்ளார் 20 வயதான மாணவி. கோண்டாவில் பகுதியில்
இடம்பெற்ற இச் சம்பவத்தில் மாணவி காதலனுடன் ஓடிய பின் அன்று மாலை தொலைபேசியில் தாயுடன் கதைத்துள்ளார். தான் தனது காதலனுடன் வவுனியாவுக்கு வந்துள்ளதாகவும் தன்னைப் பற்றி கவலைப்படாது இருக்கும்படியும் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு கடும் கோபமும் துக்கமும் அடைந்த மாணவியின் தாயார் இது குறித்து பொலிசுக்குப் போவேன் என மகளை அச்சுறுத்திய போது, ‘பொலிசுக்குப் போக வேண்டாம். போனால் எல்லா இணையத்தளங்களிலும் தனது படங்களுடன் செய்தி வரும். வந்தால் நான் கட்டாயம் தற்கொலை செய்வேன்‘ என தாயை அச்சுறுத்தியுள்ளாராம்.  இதனால் பயந்து போன தாயார் வெளிநாட்டில் உள்ள தனது மகளுடனும் மகனுடனும் தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இதன் பின்னர்  அவர்கள் தனது சகோதரியுடன் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வருமாறும் திருமணம் செய்து வைக்கின்றோம் எனவும் தெரிவித்தும் சகோதரியான காதலி மறுத்துவிட்டதாகத் தெரியவருகின்றது.
குறித்த மாணவியின் காதலன் ஆட்டோச் சாரதி எனத் தெரியவருகின்றது. வன்னியில் இருந்த பின்னர் புனர்வாழ்வு பெற்று ஆட்டோ வாங்கி ஓடி வந்த இவர் குறித்த மாணவியின் குடும்பத்தினரின் ஆட்டோச் சாரதியாகவும் இருந்து வந்துள்ளார்.

No comments:

Post a Comment