போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை அமைக்க சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதான அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பாக, ஐ.நா விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரே,
அதிகாரபூர்வ நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இதுகுறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
‘கடந்தவாரம் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் வெளியிட்ட அறிவிப்பு, அமெரிக்கா முன்னைய நிலையில் இருந்து மாறிவிட்டதாக கூற முடியாது.
ஏனென்றால், அமெரிக்கா எப்போதுமே, உள்நாட்டு விசாரணை மற்றும் அனைத்துலக விசாரணை பற்றித் தான் பேசியுள்ளது.
முன்னைய மகிந்த ராஜபக்ச ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட இறுக்கமான போக்கில் இருந்து விலகிச் செயல்வதற்கு, தற்போதைய மைத்திரிபால- ரணில் அரசாங்கத்துக்கு வாய்ப்பளிக்க கூட்டமைப்பு விரும்புகிறது.
ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் விசாரணை ஆணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் அவை பயனற்றதாகவே இருந்தன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment