நோர்வே பிரஜையான சேது என்கிற நடராசா சேதுரூபன் யாழ்ப்பாணம் நெல்லியடி பொலீஸ் பிரிவில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சேது 17.08.2015 திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பருத்தித்துறை (மஜிஸ்ரேட்) நீதவான் திரு.எம்.கணேசராசா முன்னிலையில் பொலீஸாரினால் ஆஜர்படுத்தப்பட்டார்.
இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரனுக்காக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் சமீப காலமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
கைது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய கருத்துத் தெரிவிக்கையில்,
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கைது செய்யப்பட்ட நடராசா சேதுரூபன் நீதிமன்ற உத்தரவின் பெயரில் வரும் 28.08.2015 அன்று வரை யாழ்ப்பாணம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment