August 8, 2015

மேலாண்மைத் திறம் மிக்கநகரஅபிவிருத்திச் செயற்றிட்டம்!

மேற்படி செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்யப்படும் நகரமாகமாற்றுவதில் முகங் கொடுக்க வேண்டிய சவால்களை அடையாளப்படுத்தும் முகமாகநகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும்
வடிகால் அமைப்புஅமைச்சின் கீழ் இயங்கும் நகரஅபிவிருத்தி அதிகாரசபையினால் பூர்வாங்கக் கூட்டம் ஒன்று முதலமைச்சர் காரியாலயத்தில் இன்றுகாலை 10 மணிக்குநடாத்தப்பட்டது.

அதில் உலகவங்கியைச் சேர்ந்தஅதிகாரிகளும் பங்குபற்றினர்.

2050ம்ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணநகரத்தை அபிவிருத்தி செய்யுந்திட்டம் பற்றிய கருத்தரங்கம் அங்குநடைபெற்றது. 

முதலில் வடமாகாணசபையின் பிரதமசெயலாளர் வந்திருந்தஅனைவரையும் வரவேற்று இக் கருத்தரங்கத்தில் பங்குபற்றுவதற்கு நன்றியைத் தெரிவித்தார். அதன் பின்னர் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் விளக்கக் காட்சி மூலம் மேற்படி உத்தேச யாழ் நகர அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமான விபரங்களை தெரியப்படுத்தினார். 

அதன் பின்னர் உலகவங்கியில் இருந்துவருகைதந்தஉயர் அதிகாரி மிங்சாங் அவர்கள் கண்டி , காலி போன்ற நகரங்களில் மேற்படி நகர அபிவிருத்திகளை தொடங்கியிருப்பதாகவும் இதனை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரவேண்டும் என்றுஉலகவங்கிஅதிகாரிகள் மூலம் அறிவுறுத்தல் கிடைத்ததால் இக் கூட்டத்தில் தாம் பங்குபற்றுவதாககுறிப்பிட்டார்.

அண்மையில் உலகவங்கியின் உப தலைவரை வொஷிங்டனில் முதலமைச்சர் சந்தித்ததாகவும்அதன் தொடர்ச்சியாகத்தம்மைநேரடியாகச் சென்று இக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பணிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.  இது ஒருபூர்வாங்கக் கூட்டம் என்றும் எப்பேர்ப்பட்டஅபிவிருத்திநடைபெற இருக்கின்றது என்பதை அறிந்த பின் அதற்குரிய நிதியத்தைத் தமது வங்கி இலங்கை அரசாங்கத்திற்குக் கொடுத்துதவமுன்வரும் என்றும் குறிப்பிட்டார். 


இது சம்பந்தமாகதமதுகருத்துக்களைஎடுத்துரைத்தமுதலமைச்சர் பின்வருமாறு கூறினார்- 
எமதுவடமாகாணம் இலங்கையின்மற்றையமாகாணங்களில் இருந்துமுற்றிலும் வேறுபட்டது. 

வடகிழக்குமாகாணங்களில் வசிப்பவர்கள் வேற்றுமொழியையும் பிறிதானமதங்களையும் கலாசாரத்தையுங் கொண்டுள்ளார்கள் என்பதைநீங்கள் அவதானத்திற்குஎடுக்கவேண்டும். தெற்கில் இருக்கும் 7 மாகாணங்களில் இருந்துவடகிழக்குமாகாணங்கள் வேறுபட்டவை. மண்ணியல் ரீதியாகப்பார்த்தால் வடமாகாணம் வித்தியாசமானஒன்றாகவே இருப்பதைஅவதானிக்கலாம். வடமாகாணத்தில் நதிகள் இல்லை. நீர் வீழ்ச்சிகள் இல்லை.கிணறுகளிலும்,குளங்களிலும் இருந்துதான் நீர் எடுக்கவேண்டியுள்ளது. 

சரித்திரரீதியாகவும் நாங்கள் வேறுபட்டவர்கள். 2000 வருடங்களுக்குமேலானசரித்திரத்தைக் கொண்டவர்கள் எம் மக்கள். தற்பொழுதுபோரினால் பாதிக்கப்பட்டஒருபிரதேசமாகவடமாகாணம் உள்ளது. காலி,கண்டிபோன்ற இடங்களைஅபிவிருத்திசெய்வதற்கும் வடமாகாணத்தைஅபிவிருத்திசெய்வதற்கும் இடையில் பலவேறுபாடுகள் இருப்பதைநீங்கள் அவதானிக்கவேண்டும். 

அதாவதுமுதலில் எமதுபிரதேசம் இயல்பானநிலைக்குகொண்டுவரப்படவேண்டும். கண்டி,காலிபோன்றமற்றைய இரண்டுநகரங்களும் அபிவிருத்திஅடைந்தநகரங்கள். எம்மைப் பொறுத்தவரையில் அபிவிருத்திஅடையாத,மத்தியஅரசினால் புறக்கணிக்கப்பட்டஒருபிரதேசமேஎமதுபிரதேசம்என்பதைஉணரவேண்டும். 

பொருளாதாரரீதியாகவும் எமதுமாகாணம் சற்றுவேறுபட்டது. எம்மைப் பொறுத்தவரையில் விவசாயஅடிப்படையிலானபொருளாதாரவிருத்தியையேநாங்கள் நாடிநிற்கின்றோம். சிறிய இடைநிலைதொழில் முயற்சிகளில்(SME) ஈடுபடவேநாங்கள் விரும்புகின்றோம். 

பாரியசெயற்றிட்டங்களைவகுத்துதொழிற் பேட்டைகளைஉருவாக்கிஎமதுபாரம்பரியத்தையும் விவசாயபின்புலத்தையும் மாற்றியமைக்கநாங்கள் விரும்பவில்லை. மேலும் சுற்றுலாத்துறைபோன்றவைஎமதுபாரம்பரியம் கலாசாரம், இயற்கைவளங்கள்,சுற்றாடல் போன்றவற்றிற்குஅமைவாகவிருத்திசெய்யப்படவேண்டும் என்பதுஎமதுவிருப்பம். வானளாவும் பாரிய கூட கோபுரங்களும் கட்டடங்களும் எமதுசுற்றாடலுக்குஏற்றவையல்ல. 

எமதுசுற்றாடலுக்குஅமைவாகவேவிருத்திசெய்யப்படவேண்டும் என்றுவிரும்புகின்றோம். 
தற்பொழுதுவடமாகாணத்தில் இருக்கின்றஎமதுமக்கள் இங்குகுறைந்தேகாணப்படுகின்றனர். ஒன்றரை இலட்சத்திற்குமேல் எமதுகுடிமக்கள் தென்னிந்தியாவில் முகாம்களில் வசித்துவருகின்றனர். இவர்கள் திருப்பிஅழைக்கப்படவேண்டும். அவ்வாறுஅழைக்கப்பட்டால் எமதுமக்கட் தொகைஅதிகமாகும் என்பதைநீங்கள் மனதில் கொள்ளவேண்டும்.

அரசியல் ரீதியாகவடகிழக்குமாகாணங்கள் தமதுதனித்துவத்தை இலங்கைசுதந்திரம் அடைந்தகாலந் தொடக்கம் வெளிக்காட்டிவந்துள்ளார்கள். எம்மைபிறமாகாணங்களுடன் சேர்த்துப் பார்த்ததால் எமதுதனித்துவம் பாதிப்படைந்தது. 1987ம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் 13ம் திருத்தச் சட்டம் வடகிழக்குமாகாணமக்களுக்காகவேகொண்டுவரப்பட்டது. ஆனால் மாகாணசபைகளைநாடுமுழுவதும் ஏற்படுத்திஎமதுதனித்துவத்தைநிலைபெறச் செய்யாமல் பாதிப்புள்ளாக்கிவந்துள்ளனதொடர்ந்துவந்த இலங்கைஅரசாங்கங்கள். 

13ம் திருத்தச் சட்டத்தின் கீழ் தரப்பட்டகுறைவானஉரித்துக்களைக் கூட மகாவலிஅதிகார சபை,நகரஅபிவிருத்தி அதிகார சபை போன்றமத்தியஅரசாங்கத்தின் அதிகாரசபைகளுக்கு ஊடாக பிரித்தெடுத்துள்ளனர் அரசாங்கத்தினர்.

அந்தவாறானஒருசெயற்றிட்டத்தைப் போலவே இதையுங் காண்கின்றோம். 

எம்முடன் கலந்தாலோசித்துஎமக்கானநகரஅபிவிருத்தியைஏற்படுத்தாமல் மத்தியஅரசாங்கம் தான்தோன்றித்தனமாக இங்கு தமக்கேற்றவாறு ஏற்பாடுகளை நடாத்திவருகின்றனர் என்றுநான் கருதுகின்றேன். இதனைநாம் ஏற்றுக் கொள்ளமுடியாது. எமக்கான அபிவிருத்தியை நாமே உருவாக்கவசதிகள் அளிக்கப்படவேண்டும்என்றார். 

நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புஅமைச்சின் மேலதிகசெயலாளர் திருசுரேஷ் பொன்னையாஅவர்கள் இது ஒருபூர்வாங்கக் கூட்டம் என்றும் வடமாகாணமக்களுடன் கலந்தாலோசிக்கும் விதத்திலேயேஇக் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டதுஎன்றும் வடமாகாணத்துதொழில்நுட்பக் குழு ஒன்றுதம்முடன் சேர்ந்தே இச் செயற்றிட்டத்தைமுன்னெடுப்பார்கள் என்றும் முதலில் ஒருபூர்வாங்கத்திட்டவரைவொன்றுஉங்கள் மாகாணசபைக்குதரப்பட்டுஅவைஏற்றுக் கொள்ளப்பட்டபின்னர் தான் செயற்றிட்டம்நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார். 

மேலும் பலபூர்வாங்க கூட்டங்கள் இவ்வாறுநடைபெறவேண்டி இருக்கும் என்றும் அவற்றில் யாழ் மக்களின் கருத்துக்களும் கவலைகளும் கவனத்திற்குஎடுத்துக் கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார். 

இதுஎல்லோராலும் வரவேற்கப்பட்டது.எனினும் மக்கள் சார்பானகருத்துக்களைமுதலமைச்சரிடம் இருந்துஅறிந்துகொண்டதற்காகஉலகவங்கியின் உயர் அதிகாரிமிங்சாங் அவர்கள்தமதுநன்றியைத் தெரிவித்தார். பின்னைய கூட்டங்கள் பற்றிதெரியப்படுத்தப்படும் என்றுதெரிவித்துகூட்டம் முடிவுக்குகொண்டுவரப்பட்டது.

No comments:

Post a Comment