பாதாளக் குழுவினர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் அரசியல்வாதிகளுடன் பாதாளக்குழு உறுப்பினர்களும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டார்.
கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களிலேயே பாதாளக்குழு உறுப்பினர்களின் நடமாட்டம் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சூழ்நிலையில், எதிர்வரும் பத்து நாட்களுக்குள் பாதாளக் குழுவினர் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் நிலைமையைத் தடுப்பதன் ஊடாக மாத்திரமே சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்த முடியும் எனவும் கீர்த்தி தென்னக்கோன் கூறினார்.
இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளில் பாதாளக்குழு உறுப்பினர்கள் தொடர்புபட்டுள்ளமை குறித்து தமது அமைப்பிற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.
பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய பெரும்பாலான சம்பவங்களுடன் குறிப்பாக மேல் மாகாணத்தில், பாதாளக்குழு உறுப்பினர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாதாளக்குழு நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக உரிய சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் பொலிஸ் மாஅதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment