விவேகமும் சலுகைகளுக்கு விலை போகாத தளராத உறுதியும் கொண்ட அணுகு முறையினாலேயே தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை நாம் வென்றெடுக்க முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்
யாழ்.மாவட்ட வேட்பாளர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்தார்.சுழிபுரம் பகுதியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்துக் கூறுகையில்,தமிழ்த் தேசம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானது. தமிழ் மக்களின் உயிர் விலை கொடுத்த நீண்ட கால பாராட்டத்தினூடாக தமிழ்த் தேசியப் பிரச்சினை இன்று சர்வதேச சமூகத்தின் பேசு பொருளாக மாறியுள்ளது.இந்துசமுத்திரத்தின் முத்தெனவர்ணிக்கப்படும் இலங்கைத்தீவில் மையம் கொண்டுள்ள சர்வதேச நாடுகளின் நலன்களும் அந்த நலன்களை தமதாக்கி கொள்வதற்காக வல்லரசுநாடுகள் தமிழ் மக்களில் தங்கியிருப்பதும் தமிழ் மக்களின் பேரம் பேசும் வலுவை அதிகரித்துள்ளது.
இந்த இரண்டு சாதகமான புறநிலைமைகளும் எமது மேற்படி நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றது.ஆனால் தமிழ் மக்களிடையே வலம் வரும் போலி அரசியல் வாதிகளினால் தமிழ் மக்களிடையே ஒரு தோல்விமனப்பான்மைவிதைக்கப்பட்டுள்ளது.முப்பதுவருடம் போராடி எம்மால்முடியாமல்போய்விட்டது,பயனில்லாமல்போய்விட்டது. இனித் தருவதையாவது வாங்குவதுதான் புத்திசாலித்தனம் என்று தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கதை கட்டவிழ்த்துவிடப்படுகின்றது. இதைவிடபோலி அரசியல் வாதிகளின் ஆவேச மேடைப் பேச்சுக்களை நம்பிமக்கள் வாக்களித்தார்கள். முக்கியமாக மாகாணசபைத் தேர்தலில் பெரும்நம்பிக்கையோடுவாக்களித்தார்கள்.ஆனால்மாகாணசபை மூலம்எந்தவித பயனும் கிடைக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவில் வாக்களித்தனர். அவர்கள் சரத் பொன்சேகாவுக்கு பொதும ன்னிப்பளித்துஅவரதுபட்டம்பதவிகளை எல்லாம்திருப்பிகொடுத்தார்கள்.ஆனால்சிறைகளில்வாடும்தமிழ் இளைஞர்கள்பற்றியோகாணாமல்போன தமிழர்கள் பற்றியோ எந்தவித அக்கறையும் காட்டவில்லை என்றார்.
No comments:
Post a Comment