July 24, 2015

வவுனியாவில் பட்டப்பகலில் இளைஞன் மீது கத்திகுத்து ; பொலிஸ் காவலரண் அருகே சம்பவம்!

வவுனியாவில் இளைஞன் மீது இன்று வியாழக்கிழமை கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த சம்பவம் இன்று பிற்பகல் 2.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் வீதியில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாகவுள்ள பேரூந்து தரிப்படத்தில் நின்ற இளைஞன் மீது முச்சக்கரவண்டியில் வந்த சிலர் கத்தியால் குத்தியுள்ளனர்.
100 மீற்றர் தூரத்திற்கும் குறைவாக பொலிஸ் காவலரண் அமைந்துள்ள மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மக்கள் பொலிஸார் மீதும் விசனம் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களால் குறித்த இளைஞன் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதேவேளை மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டராங்கள் தெரிவித்துள்ளன.
இச் சம்பவத்தில் வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராசா சுரேந்திரன் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.dcp54574555756 (3)

dcp54574555756 (2)

No comments:

Post a Comment