ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த 14 மாதங்களுக்குப் பிறகு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினேன். ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஆந்திர அரசு இதற்கு கோர்ட்டில் தடை பெற்றுள்ளது. எனவே சிபிஐ விசாரணை நடத்த உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக பிரதமரை சந்தித்தேன்.
20 தமிழர்களை ஆந்திர அரசு சுட்டுக்கொன்ற வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட வேண்டும். முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்திப்பதற்காக கடந்த 15ஆம் தேதி மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திராவிட கழகம், தந்தை பெரியார் கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. வருகிற 29ஆம் தேதி முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
No comments:
Post a Comment