July 15, 2015

விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உப தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தன்னுடைய தேசியப்பட்டியலில் இடமளிக்கவில்லை.

அதுபோல, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் நேரடியாக போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அளிக்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதியாக செயற்பட்ட கருணா அம்மான், அந்த அமைப்பிலிருந்து விலகி வந்து புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்து அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார். பின்னர், அந்தக் கட்சியிலிருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவி வகித்த காலத்தில் சுதந்திரக் கட்சியில் இணைந்தார்.
இதனையடுத்து, மஹிந்த ராஜபக்ஷவினால் கருணா அம்மான் இரண்டு தடவைகள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும், மீள்குடியேற்றத்துறைப் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது. எனினும், இம்முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

No comments:

Post a Comment