கிழக்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரம் மிக்க அதிகாரிக்கு எதிராக வெளியிடப்பட்டுவரும் அநாமதேய துண்டுப்பிரசுர நடவடிக்கையை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
இன்று புதன்கிழமை பிற்பகல் 12.30மணியளவில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஒன்றுதிரண்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு விரிவுரையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்தனர்.
கடந்த காலத்தினை போன்று பல்கலைக்கழகத்தினை குழப்பி சீரழிக்க அனுமதியோம்,சுயநலத்திற்காக பிரதேசவாதத்தினை தூண்டி வெற்றிபெற அனுமதியோம்,குழப்பாதே குழப்பாதே நல்ல நிர்வாகத்தினை குழப்பாதே போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேடுகள் காரணமாக அரசினால் தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியை உமா குமாரசாமி அவர்கள் நியமிக்கப்பட்டனர்.
சட்டத்திற்குட்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தாமல் தனிப்பட்ட ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்திப ல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தக்காரணமாயிருந்த சிலர் பல்கலைக்கழகத்தின் சுமுகமான சூழ்நிலையினை குழப்புவதற்காக பிரதேசவாதம் சார்ந்த அநாமதேய துண்டுப்பிரசுங்களை வெளியிடுவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment