நாவற்குழி, தச்சன்தோப்பு ரயில் நிலையம் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்த நிலையத்தில் ஊழியர்கள் எவரும் இல்லாத பிற்பகல் 3 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் ரயில் நிலையத்தின் கண்ணாடிகள் மற்றும் மலசலகூடக் கதவுகள் என்பன உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அந்தப் பகுதியில் மதுபானப் போத்தல்கள் உடைக்கப்பட்டு காணப்படுகின்றன.
சாவகச்சேரிப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment