July 15, 2015

தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே தமிழ் மக்களின் தெரிவாக அமையவேண்டும் – யேர்மனியில் நடைபெற்ற மக்கள் கலந்துரையாடல்!

யேர்மனியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக நடைபெற்று வரும் மக்கள் கலந்துரையாடலின் வரிசையில் ஞாயிற்றுக்கிழமை Hannover  நகரில் மக்கள் கலந்துரையாடல் நடைபெற்றது , இச் சந்திப்பில் தாயகத்தில் நிலவும் சமகால அரசியல்  நிலைமையை விளக்கியதோடு எதிர்வரும்
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியத்தை நிலை நிறுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே தமிழ் மக்களின் தெரிவாக அமையவேண்டும் என்பதையும் வலியுறுத்தப்பட்டது .
இக் கலந்துரையாடலில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இணையவழி ஊடாக பிரித்தாணியாவில் இருந்து கலந்துகொண்ட ஊடகவியாளர் திரு கோபி அவர்கள் விளக்கம் கொடுத்ததோடு , தாயகத்தில் தமிழ் மக்களின் விடுதலையை நோக்கிய பயணத்தில் தேவைப்படும் மாற்றுத் தலைமை ஒன்றின் தேவையை சிறப்பாக எடுத்துரைத்தார் .
அத்தோடு கனடா தேசத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக செயற்படும் வகையில் செயற்பாட்டாளர்  கலந்துகொண்டு புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு கொடுக்க வேண்டிய தார்மீக ஆதரவை வலியுறுத்தி , தாயகத்தில் வாழும் எமது உறவுகளின் ஊடாக தமிழ்த் தேசியத்தை உயிர்வாழ வைக்கவேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார் .
அத்தோடு எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் யேர்மனியில் Mörfelden-Walldorf ,   Roßdorf , Bürstadt ,  Ennepetal , Dortmund  ஆகிய நகரங்களில்  பரவலாக மக்கள் சந்திப்புகள் நடைபெறும் என்பதையும் இத்துடன் அறிவிகின்றோம் .
hannoverhannover2

No comments:

Post a Comment