31.07.2015 இன்று காலை சாவகச்சேரி மக்களை
சந்தித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்களும் சாவகச்சேரி பகுதியை
சேர்ந்த சட்டத்தரணி மணிவண்ணன் ஆதரவாளர்களும் அங்குள்ள மக்களை சந்தித்து
பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த பொலிசார் தேர்தல் பிரச்சாரங்களை
உடனடியாக நிறுத்தி சாவகச்சேரியிலிருந்து வெளியேறுமாறு பணித்தனர்.
சட்டத்துக்கு
புறம்பான முறையில் பொலிசார் அராஜகம் செய்ய முடியாது என பொலிசாருடன் சட்டம்
பேசிய சட்டத்தரணி ஜோதிலிங்கம் உடனடியாக கைது செய்யப்பட்டு பொலிஸ்
வாகனத்தில் ஏற்றப்பட்டார்.
தொடர்ந்து த.தே.ம.மு வேட்பாளர் சிவகுமாரன் கைது செய்யப்பட்டார்.
அடுத்து தினேஷ், கணேஷ் என்பவர்கள் பொலிசாரால் வலுகட்டாயமாக கைது செய்யப்பட்டார்கள்,
இந்த
சம்பவம் குறித்து த.தே.ம.மு ஊடகப்பேச்சாளரும் சைக்கிள் சின்னத்தில்
இலக்கம் 8ல் போட்டியிடுபவருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடகங்களுக்கு
தெரிவிக்கையில் “மாற்றத்தை விரும்பாத வேறுகட்சியின் பின்புலத்தில் இதற்கு
காரணமான அருந்தவம் செய்தவர்கள் உள்ளனர் எனவும், சாவகச்சேரி பிரதேசத்தில்
அதிகரித்துவரும் த.தே.ம.மு ஆதரவு அலையை தடுக்க முடியாமல் பொலிஸ் அராஜகத்தை
ஏவுகின்றனர்.
அங்கு வந்த கூட்டமைப்பு காரர்கள்
சிலர் இளைஞர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. உங்களுக்கு வயதும் அனுபவமும்
காணாது என கூச்சலிட்டதாகம், சட்டத்தரணிகளான நாங்கள் இதற்கு சட்டநடவடிக்கை
எடுக்கவுள்ளொம் எனவும். தொடர்ந்தும் அநீதிகளுக்கெதிராக குரல் கொடுப்போம்.“
எனவும் தெரிவித்தார்.
- 52
No comments:
Post a Comment