வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜக்கிய தேசிய கட்சிக்கே ஆதரவு தெரிவித்துள்ளார். இவ்வாறு புதிய விளக்கம் ஒன்றினை
கொடுத்துள்ளார். அக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன்.
யாழ்.நல்லூர் பகுதியில் நேற்று மாலை ஜக்கிய தேசிய கட்சியின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தலமைதாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்படி புதிய விளக்கத்தினை கொடுத்துள்ளார்.வடமாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை என்று பகிரங்கமான அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
சமாதான முயட்சி மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வினை காணக் கூடியவர்களுக் வாக்களிக்குமாறு முதலமைச்சர் மக்களை கோரியிருக்கின்றார்.அடுத்த ஆட்சியில் அரசியல் தீர்வினை காண்பதற்கு ஜக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி அவசியமாகும்.இதனால் ஜக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடைய எண்ணமாக உள்ளது. முதலமைச்சரின் இப் பகிரங்க அறிக்கை தொடர்பில் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment