மட்டக்களப்பு மண்டூரில் நாவிதன்வெளி சமூக சேவை அதிகாரியான கே.மதிதயான் எனும் சிவில் அதிகாரியொருவர் கடந்த மாதம் 26 ஆம் திகதியன்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு தலைமையக புலனாய்வுப் பொலிஸ் அதிகாரியின் வழி நடத்தலில் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பொலிஸாரும் இணைந்து மூன்று அணியாக புலனாய்வு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக வெல்லாவெளி, திக்கோடை பிரதேசத்தைச் சேர்ந்த விடுதலைப் புலி இயக்க முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டு கொழும்பு புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து மற்றைய இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறினர்.

No comments:
Post a Comment