June 22, 2015

முல்லைத் தீவு பகுதியில் மனிதப் புதை குழியில்… பெண்களின் உடல்களும்.!

இலங்கை போரின்போது லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் முடிந்த பின்னர் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகராக விளங்கிய கிளிநொச்சிக்கு அருகே ஒரு கிணற்றில் சில
பெண்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
இப்போது முல்லைத் தீவு பகுதியில் மனிதப் புதை குழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் ராணுவத் தலைநகராக இந்நகரம் விளங்கியது.
இந்த மாவட்டத்தில் புதுக் குடியிருப்பு என்ற நகரமும் உண்டு. இதுவும் விடுதலைப்புலிகளின் கோட்டையாக விளங்கியது.
போரின்போது இங்கு வசித்த மக்கள் ஏகப்பட்ட அளவில் கொல்லப்பட்டனர். இப்போது மறுகுடியமர்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தற்காலிக வாழிவிடங்களில் மக்கள் தங்கியுள்ளனர். இப்பகுதியை சீரமைத்தப்போது பல இடங்களில் மனிதப் புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இவர்கள் அனைவரும் போரின்போது சிங்கள ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு, ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment