வவுனியா மாவட்டச் செயலரை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளாதென தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று தெரிவித்துள்ளனர்.
கூட்டமைப்புப் பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியபோது வவுனியா மாவட்டச் செயலருக்கு எதிராக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் போர்க் கொடி தூக்கியுள்ள விவகாரம் குறித்து பிரதமருக்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் எடுத்து விளக்கியதாக கூட்டமைப்பின் சாதனையாக அது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக கடிதம் மூலம் பிரதமருக்கு நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தியிருந்தனர். இதனடிப்படையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் பிரதமருடன் நேற்று சந்திப்பு இடம்பெற்றது. பிரதமர் ரணில் வவுனியா மாவட்ட அரச அதிபரை உடனடியாக இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

No comments:
Post a Comment