June 25, 2015

யாழ்லில் பல்வேறு கொள்ளை, வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேர் கைது !

யாழ்.குடாநாட்டில் பல்வேறு கொள்ளை,திருட்டு மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன்தொடர்புடைய 7 பேர் இன்றைய தினம்அதிகாலை மானிப்பாய் பொலிஸாரினால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இராணுவ சிப்பாயின் வழி நடத்தலில்
செயற்பட்டார்கள் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இருந்துபெருமளவு பணம், நகை,வாள், தொலைபேசிகள் உள்ளிட்டபெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகபொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் மீது வாள் வெட்டு நடத்தப்பட்டதில் குறித்த மாணவனின் கை துண்டாடப்பட்ட
நிலையில் குறித்த மாணவன் தற்போது வரையில் கொழும்பு வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வருகின்றான்.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ராஜ்குமார் கபிலராஜ்(வயது24) என்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்றைய தினம் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த நபர் வழங்கிய தகவல் அடிப்படையில் இன்றைய தினம் கிளிநொச்சி- சாந்தபுரம் மற்றும் உருத்திரபுரம் பகுதிகளைச் சேர்ந்த 7 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்றைய தினம் அதிகாலை திடீர் சுற்றிவளைப்பு ஒன்றின் மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்திருக்கும் பொலிஸார் இவர்களிடமிருந்து நகைகள் 4மோட்டார் சைக்கிள்கள் தொலைபேசிகள் ஐபாட்கள் 6 லட்சத்து 96 ஆயிரம் ரூபா பணம் மற்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த கும்பல் யாழ்.குடாநாட்டில் பல கொள்ளை மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவை எனவும் பொலிஸார்தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment