June 25, 2015

கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்!

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள், தளபதிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பல்வேறு தகவல்களை முன்னுக்குப்பின் முரணாகத் தெரிவித்துக்
கொண்டிருக்கும் நிலையில், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மகனும், சமாதானச் செயலக பணிப்பாளர் புலித்தேவனின் மனைவியும், நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் மலரவனின் மனைவியும் வெள்ளைக்கொடி விவகாரத்தில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களாக மாறியுள்ளனர்.
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான காரியாலயத்தில் அமைந்துள்ள விசேட அறையொன்றில் நேற்று மாலை சுவிஸ் நேரப்படி 5.30 மணியளவில் நடந்த விசேட கூட்டடத்திலே் இவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.இக் கலந்துரையாடலினை பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனமாகிய பசுமைத் தாயக அமைப்பும், அமெரிக்காவின் தமிழர் பாதுகாப்புச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெண் பிள்ளைகளை பெற்றோரோடு வந்து சரணடையுமாறு கூறிய இராணுவம் பின்னர் பெற்றோரிடத்திலிருந்து பிள்ளைகளை பிரித்து தனியாக அழைத்துக் கொண்டு போனார்கள் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனின் மனைவி தெரிவித்துள்ளார்.அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன், மற்றும் எனது கணவன் புலித்தேவன் ஆகியோருடன் காயமடைந்த பல போராளிகளும் வெள்ளைக்கொடியுடன் சரணடைகின்றோம் என சர்வதேசத்திற்கு தெரிவித்ததன் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் சுடப்பட்டுள்ளனர், ஆனால் ஏன் எப்படி சுடப்பட்டுள்ளனர் என்பது தொடர்பில் எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எழிலன் உட்பட பல போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைவதை நான் நேரில் கண்டேன். போராளிகள், தளபதிகள் உட்பட்டவர்களின் அங்க அடையாளங்களை கூறியும், பெயர்களை சரியாக உச்சரித்தும், ஒவ்வொருத்தராக அழைத்தனர். தமிழை சரளமாக பேசக்கூடியவர்களும் இராணுவத்தினருடன் இருந்தனர். என்னை கடுமையாகத் தாக்கினார்கள் என்று கண்ணீர் பெருக்கெடுக்க தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார் தளபதி மலரவனின் மனைவி.puli_wife_01wifemalaravan
geneva-wi-2
geneva-wi-4
geneva-wi-5
geneva-wi-6
geneva-wi-7
geneva-wi-9

geneva-wi-10

No comments:

Post a Comment