வடமாகாணசபை உறுப்பினரின் சிறப்புரிமையை மீறும் வகையில் வவுனியா மாவட்டச்செயலர் நடந்து கொண்டமை தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசியிருக்கின்றபோதும், குறித்த மாவட்டச்செயலர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தவறியிருக்கின்றார்கள். இந்நிலையில் கூட்டமைப்பின் கட்சி தலைமைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தவிடயத்தில் கையாலாகாதவர்களாகவோ, நடவடிக்கை எடுக்க விரும்பாதவர்களாகவோ இருக்கவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக எமக்கு தெரியப்படுத்தியமைக்கமைய நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு விடயத்தை தெரியப்படுத்தியிருக்கின்றோம்.
இந்த விடயம் மட்டுமல்லாமல் அரசியல்ரீதியான நியமனங்கள் மற்றும் காணிகள், அரசியல் கைதிகள் விடயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளபோதும் இதுவரையில் எமக்கு பதில் வழங்கப்படவில்லை. குறித்த மாவட்டச்செயலர், மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எமக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தொடர் ஏமாற்று வேலைகளே நடைபெறுகின்றன. ஆக்கபூர்வமாக எவையும் நடைபெறவில்லையென அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment