யாழில் உள்ள இன்ரர் நெட் கஃபேக்களில் 18 வயதுக்கும் குறைவான மாணவர்கள் , தமது ஜோடிகளோடு சென்று காதல் லீலை புரிந்து வருகிறார்கள். இதற்கு ஏற்றால் போல் தான் யாழ் இன்ரர் நெட் கஃபேக்கள்
அமைக்கப்பட்டும் உள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கம்பியூட்டரும் அமைந்திருக்கும் மேசை , மூடி மறைக்கப்பட்டு ஒரு சிறிய அறைபோல உள்ளது. இதனால் அதனுள் சென்று பூட்டிக்கொண்டால் வெளியே நிற்பவர்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாது. பள்ளி நேரங்களில் தனது காதலியை அல்லது காதலனை அழைத்து வரும் மாணவர்கள். உள்ளே சென்று பூட்டிக்கொள்கிறார்கள். அங்கே அவர்கள் பல்லான பலான படங்களை இன்ரர் நெட்டில் பார்த்துவிட்டு , காதலியோடு சில்மிஷத்தில் ஈடுபடுகிறார்கள்.
இதன் காரணமாக ஒரு வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்துள்ளது. மாணவி ஒருவரை இவ்வாறு அழைத்துச் சென்ற 16 வயது மாணவர் அவரிடம் தப்பாக நடக்க முயன்றதாக மாணவி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதி இளஞ்செழியான் கண்டும் ஆத்திரமடைந்தார். யாழ்ப்பாணத்தில் சைபர் குற்றங்கள் புரிவதற்கு, சைபர் கபேக்கள் அல்லது இணையதள நிலையங்கள் உறுதுணையாக இருப்பதாகவும் எனவே, சைபர் குற்றம் சம்பந்தமான சட்டங்களை இறுக்கமாகக் கடைப்பிடித்து அமுல்படுத்துமாறு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.
சைபர் கபேக்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பில் வைத்து, அங்கு குற்றங்கள் புரியப்படுபது கண்டறியப்பட்டால், அந்த நிலையங்களை சீல் வைத்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தகைய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காதலர் ஜோடிகளின் பூங்காக்களாக யாழ்ப்பாணத்தில் உள்ள சைபர் கபேக்கள் இயங்குவதாகக் குற்றச்சாட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளன என சுட்டிக்காட்டியுள்ள அவர், சைபர் கபேக்கள் பொதுமக்கள் மத்தியில் பகிரங்க இடத்தில் இயங்குவதனால், அவைகள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு இயங்குகின்றனவா என கண்டறிந்து, அங்கு, கலாசார சீரழிவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment