June 29, 2015

முன்னாள் புலிகளின் அரசியல் மற்றும் தலைமைச் செயலகப் பொறுப்பாளர் ரூபன் திருமலையில் போட்டி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருமலை மாவட்ட
அரசியல் பொறுப்பாளராகவும் பின்னர் தலைமை செயலகப் பொறுப்பாளராகவும் விளங்கிய ரூபன் (ஆத்மலிங்கம் ரவீந்திரா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார்.

நேற்று (26/ 06/2015) இரவு 8 மணியளவில் இலக்கம் 36 மார்டின்வீதி யாழ்ப்பணத்தில் உள்ள கட்சியின் தலைமைப் பணிமனையில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா விடம் தமது எழுத்து மூலமான விண்ணப்பத்தை சமர்ப்பித்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கப்பட இருந்த வட/கிழக்கு இடைக்கால நிருவாகக் கட்டமைப்பில் புலிகளின் சார்பில் ரூபனுடன் தெரிவாகி இருந்தவரும் தற்போதைய வடமாகாணசபை சபாநாயகர் ஆகிய திரு.சீ .வி . கே. சிவஞானம் அச்சமயம் மாவையுடன் இருந்தார்.

மேலும் இன்று காலை கட்சியின் துணைத் தலைவர் திரு. க.துரைரட்ணசிங்கம் மூலமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் திரு. இரா. சம்பந்தருக்கான பிரதியை அவர் அனுப்பி இருந்தார் . கட்சிச் செயலருக்கான பிரதியை பதிவுத் தபால் மூலம் அனுப்பி உள்ளார்.


மாவையிடம் சமர்பித்த இவ் விண்ணப்பத்தில் தாங்கள் கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டபின்னர் மட்டக்களப்பில் நடைபெற்ற வரவேற்பு வைபவத்தில் தீவிரவாத இளைஞனாக இருந்த போது மட் / சிறையிலிருந்த அனுபவங்களை பகீர்ந்து கொண்டீர்கள் என்பதாலும், சுவிஸ்லாந்தில் கருத்து தெரிவிக்கும் போது கிளிநொச்சியில் தலைவர் பிரபாகரனை சந்தித்த நாளை மறக்க முடியாத நினைவாக குறிப்பிட்டீர்கள் என்ற வகையிலும் தீவிரவாத இளைஞர்களின் உணர்வுகளை உங்களால் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியும் என்று முழுமையாக நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திருமலை மாவட்டத்தில் தனக்கு வேட்பாளாராக நிற்கும் வாய்ப்பு வழங்கப்படுமிடத்து இத் தேர்தலில் இம் மாவட்டத்திலிருந்து கட்சியின் சார்பில் இரு உறுப்பினர்களை தெரிவு செய்யப்படுவதற்கு ஏற்றவகையில் செயலாற்றும் திறன் தனக்கு உன்ளது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


ஒரு போராளியாக இதுவரை மக்கள் சேவையை செய்து வந்த நான் பாராளுமன்ற அங்கத்துவத்தின் மூலம் போரால் பாதிக்கப்பட்டு சீரழிந்து போன மக்களுக்காக மட்டும் மன்றி அனைத்து தமிழ் பேசும் மக்களுக்காகவும் இறுதிவரை பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

திரு.ரூபன் 13.05.1985 முதல் இறுதி யுத்தம் முடிவுக்கு வந்த 17/05/2009 வரையிலான 24 வருடங்கள் புலிகள் அமைப்பில் போராளியாக விளங்கினார்.
1989 முதல் 1993 வரை திருமலை அரசியல் பொறுப்பாளராக கடமையாற்றினார்.


1990 யில் பிரேமதாசா அரசுடனான பேச்சு வார்த்தைகளில் பங்கு பற்றினார்.
1995 யில் சந்திரிக்கா அரசுடனான பேச்சு வார்த்தையின் நிமிர்த்தம் மீண்டும் திருமலை அரசியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1996 யாழ் இடம்பெயர்வின் பின் 1996 செப்டெம்பர் முதல் 2000 டிசம்பர் வரை பொருமிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராக செயலாற்றினார்.
2000 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருமலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி 13000 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று தமிழ் பிரதிநித்துவம் இழந்தது.


இதனை அடுத்து திரும்பவும் தமிழ் பிரதிநித்துவத்தை ஏற்படுத்தும் பொருட்டு மீண்டும் அரசியல் பொறுப்பளாராக தலைவர் பிரபாகரனால் திருமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.


23/10/2001 யில் சம்பந்தன் ஐயாவை சேனையூருக்கு அழைத்து இவ் விடயம் பற்றி கலந்துரையாடினார்.


அதன் பின் நடந்த தேர்தலில் கட்சி 66500 மேற்ப்பட்ட வாக்குகளை பெறவும் சம்பந்தன் ஐயா மீண்டும் பாராளுமன்றத்துக்கு செல்ல வழிவகுத்தார்.

அமெரிக்காவில் அரசியல் கற்கை நெறிகளை கற்று வந்த ஒருவரின் துணையுடன் ஊடகவியாலாளர் ந.வித்தியாதரன் போன்றோர். முன்னைநாள் போராளிகள் மாவீரர் குடும்பங்களின் வாக்குகளை சிதறடிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கும் போது அரசியல் அனுபவமும் மக்களுடன் நெருங்கிய தொடர்பும் உள்ளவருமான ரூபன் தமிழரசுக் கட்சியிடம் வேட்பாளர் நியமனம் கோரியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும் . 

No comments:

Post a Comment