June 23, 2015

சிங்கள வாக்குகளினால் மட்டும் ஆட்சியமைக்க முடியாது: மைத்திரிபால சிறிசேன1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியாகவிருந்தாலும் வெறுமனே சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கமொன்றை அமைத்துவிட முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

அதற்கமைய அரசாங்கமொன்றை நிறுவ வேண்டுமாயின் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களினதும் வாக்குகள் அவசியம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நுவரெலிய மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நுவரெலிய புதிய நகர சபை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தனியாக முன்னணி அமைப்பதற்காக அழைக்கும் கூட்டம் இலங்கைக்கு துரோகம் இழைப்பதுடன், இடதுசாரிக் கொள்கைக்கும் துரோகம் இழைப்பதாக அமையும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
கட்சிக்குள் எவரையும் வெட்டி விடுவதற்கோ, வேறுக்கவோ வேண்டிய தேவை எனக்கு இல்லை. எனது தேவை எல்லாம் நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் இணைந்து செயலாற்றி அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்பதேயாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment