மட்டக்களப்பு ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஈரளக்குளம் கிராமத்தில் பாம்பு தீண்டியதால் பெண்ணொருவர்உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி மங்களம் (வயது 50) என்ற ஆறு பிள்ளைகளின் தாயாரே பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மங்களத்தை, அவரது வீட்டில் விசப்பாம்பு தீண்டியுள்ளது.
உடனடியாக அவர் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் நண்பகல் அவர் மரணித்துள்ளார்.
No comments:
Post a Comment