கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கடற்படை அதிகாரி ஒருவரை தூற்றியதாக தெரிவிக்கப்படும்
குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடு எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
சம்பூர் மகாவித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முதலமைச்சர், கடற்படை அதிகாரி ஒருவரை இந்த இடத்தில் இருந்து அகன்று செல்லுமாறு தூற்றிய காணொளி இணையங்களில் பரப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த காணொளியை தாம் பார்த்ததாக குறிப்பிட்டுள்ள ஹெட்டியாராச்சி, முறைப்பாடுகள் செய்யப்பட்டால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ மற்றும் அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

No comments:
Post a Comment