தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதற்கு ஜெயலலிதா கருணாநிதிக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும் என பாஜக தலைவர் சுப்பிரணியன் சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைய திமுக தலைவர் கருணாநிதி தான் காரணம் என பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சுப்பிரமணியன் சாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் கருணாநிதி பற்றி மீண்டும் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கருணாநிதி
திமுக பல்வேறு தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்துள்ளது. கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு சினிமா படங்களுக்கு கதை, வசனம் எழுதலாம்.

தேமுதிக
பாஜக, திமுக, தேமுதிகவை இணைத்து ஒரு கூட்டணி அமைக்க முயற்சித்தோம். ஆனால் திமுக காங்கிரஸை கூட்டணிக்கு சேர்த்ததால் அந்த முயற்சியை கைவிட்டோம். புதிய அதிமுக அரசு எதையும் பெரிதாக சாதிக்கப் போவது இல்லை.

ஜெயலலிதா
500 டாஸ்மாக் கடைகளை மூடுவது ஏமாற்று வேலை. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்திலேயே அவருக்கு சாதகமான சூழல் இல்லை. ரூ. 55 கோடியை ரூ.3 கோடியாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைப்பது உறுதி.

தில்லுமுல்லு
அதிமுக தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றுவிட்டது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். கருணாநிதி செய்த தில்லுமுல்லு அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பா.சிதம்பரத்தை வெற்றி பெற்றதாக அறிவிக்கும்படி செய்தார். சென்னை மாநகராட்சி தேர்தலில் சந்திரலேகாவை தோற்கடித்தார்.

தனித்து போட்டி
அடுத்த தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிடுமாறு பாஜக தலைமையை வலியுறுத்துவேன். இதை கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தெரிவிப்பேன். ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்தி, அகமது பட்டேல், ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்.

No comments:
Post a Comment