சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தேங்கியிருந்த
வெள்ளநீர் வடிந்தோடியுள்ள நிலையில் தமது சொந்த வீடுகளுக்கு செல்லும் மக்கள் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துவருகின்றனர்.
உணவு சமைக்க வழியில்லாமலும் வீடுகளில் இருந்த பொருட்களின் அழிவடைந்துள்ளதாலும் மக்கள் செய்வதறியாது தவித்துவருகின்றனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட மக்களே இவ்வாறு கடும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சிறு குழந்தைகளுடன் வீடு திரும்பும் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, மாற்றுடை குழந்தைகளுக்கான பால் மா என எந்தவித அடிப்படை தேவைகளும் இல்லாத நிலையிலும் திண்டாடிவருகின்றனர்.
கொலன்னாவ வெல்லம்பிட்டிய கடுவளை நவகம்புர உள்ளிட்ட பல பகுதிகளிலும் மக்கள் இவ்வாறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். பல இடங்களில் மிருகங்கள் இறந்துள்ளதாலும் குப்பைகள் மலைபோல் உயர்ந்துள்ளதாகும் மக்கள் பாதிப்புக்களை சந்தித்துவருகின்றனர். அத்துடன் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ள மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
இது இவ்வாறு இருக்க பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தூய்மையாக்கல் பணிகளில் தற்போது இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் கார் வேன் போன்றவற்றை மக்கள் வீடுகளில் விட்டுவிட்டே பாதுகாப்பான இடங்களுக்கு வௌ்ளத்தின்போது சென்றிருந்தனர். இந்நிலையில் வௌ்ள நீர் வடிந்தோடி நிலையில் வீடு திரும்பிய மக்கள் தமது பொருட்களின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விசேடமாக வீடுகளில் இருந்த இலத்திரனியல் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வௌ்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வீடு திரும்பிவருகின்ற மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன் செய்வதறியாது நிற்கின்றனர். மேலும் வீடுகளை தூய்மைப்படுத்துவதிலும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக துர்நாற்றம் வீசுகின்ற மற்றும் குப்பைகளினால் நிறைந்து காணப்படுகின்ற வீடுகளை சுத்தப்படுத்துவதற்கு தேவையான மருந்துவகைகள் இன்றியும் மக்கள் அவசதிப்பட் #173;டுவருகி்ன்றனர்.
“”இதேவேளை களனி கங்கையின் நீர் திறந்துவிடப்படும் என்று உரிய முறையில் எங்களுக்கு அறிவித்திருந்தால் நாங்கள் பாதுகாப்பான ஏற்பாடுகளை முன்னெடுத்திருப்போம். ஆனால் எமக்கு எவ்விதமான அறிவிப்புக்களும் செய்யப்படாமலேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் எங்களினால் பெறுமதியான பொருட்களைக் கூட பாதுகாக்க முடியவில்லை”” என்று வீடுகளுக்கு திரும்பிய பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் இதற்கு முன்னர் வௌ்ளம் ஏற்பட்டபோது இவ்வாறு அதிகளவு நீர் வந்ததில்லை. ஆனால் இம்முறை அதிக வௌ்ளம் ஏற்பட்டதால் எங்களினால் சமாளிக்க முடியாமல் போனது என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிட்டனர்.
இது இவ்வாறு இருக்க வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் தமது துயரம் குறித்து குறிப்பிடுகையில்
இந்த வௌ்ள அனர்த்தத்தில் சொல்லொணா துன்பங்களை நாங்கள் எதிர்கொண்டோம். பெரும்பாலான மக்களின் வேன் கார் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முற்சக்கர வண்டிகள் இந்த வௌ்ளத்தில் மூழ்கிவிட்டன. அது மட்டுமன்றி வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டிகள் தொலைக்காட்சி சலவை இயந்திரங்கள் எரிவாயு அடுப்புக்கள் என்பன முழுமையாக நீரில் மூழ்கியமையின் காரணமாக நாசமடைந்துவிட்டன.
அத்துடன் வீட்டு உபகரண தளபாடங்களான கதிரைகள் மேசைகள் கட்டில்கள் என்பனவும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் பல துயரங்களை எதிர்கொண்டுள்ளனர் என்றார்.
அத்துடன் வீடு திரும்பும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பொருட்களின் நிலைமைகளை பார்த்து விரக்தியடைந்துள்ளனர். ஆறு நாட்கள் தொடர்ச்சியாக நீர் இருந்தமையினால் அனைத்து பொருட்களும் நாசமாகிவிட்டன. தற்போது வீடு திரும்பும் மக்கள் உணவு தயாரிக்க முடியாமல் அவதியுறுகின்றனர்.
காரணம் வீட்டில் உள்ள எந்தப் பொருட்களையும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. நான் கூட எனது வீட்டுக்கு திரும்பி ஒரு நாள் முழுவதும் உணவு இல்லாமல் இருந்தேன் என்றார்.

No comments:
Post a Comment