பம்பலபிட்டியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையின் களஞ்சியசாலையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.44 வயது மதிக்கதக்க பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த பெண்ணை கொலை செய்து களஞ்சியசாலையில் போட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இந்தப் பெண் கடந்த 14ஆம் திகதி காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்
No comments:
Post a Comment