April 22, 2015

எங்கிருக்கிறார் இவர்? தீவிரமாக தேடும் லண்டன் பொலிஸார்!

லண்டன் மிச்சம் பகுதியில் கடந்த வருடம் நடந்த கொள்ளை மற்றும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் நபரது புகைப்படத்தை புலனாய்வு பிரிவு பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

Mitcham,Montrose Gardens பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 30ம் திகதி புதன்கிழமை நடந்த கொள்ளை மற்றும் Belmont Avenue பகுதியில் செப்டம்பர் மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 24 வயதான அரவிந்தன் ரவீந்திரன் என்ற நபரின் புகைப்படமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஆசியாவை சேர்ந்த ரவீந்திரன் என்ற இந்த நபரின் உயரம் 5அடி 3அங்குலம் எனவும் மாநிறமான அவரது தலை மயிர் கறுப்பு நிறமாக காணப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபரின் இடது முழங்கை பகுதி நீள தழும்பு ஒன்று காணப்படுகிறது.
ரவிந்திரன் Middleton Road, Morden மற்றும் Cedars Avenue, Mitcham ஆகிய பகுதிகளில் வசித்து வந்துள்ளதுடன், Croydon மற்றும் Coventry ஆகிய பிரதேசங்களிலும் இருக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேக நபர் இருக்கும் இடத்தை அறிந்துள்ளவர்கள் அது பற்றி தமக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.


aravitha_ravinthiran_001

No comments:

Post a Comment