April 22, 2015

வடமராட்சி கிழக்கில் அடிப்படை வசதிகளின்றி அவலப்படும் மக்கள் போராட்டம்!

வடமராட்சி கிழக்கில் அடிப்படை வசதிகளின்றி அவலப்படும் மக்கள் இன்று  தமது பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடி;கைகளை வலியுறுத்தி  10 அம்சகோரிக்கைள் வைத்து உண்ணா விரதப்போராட்டம்  ஒன்றினை நடத்தினர். பின்னர் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் உறுதி மொழியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இவ் போராட்டத்திற்கு கலந்து கொள்ள வேண்டாம் என்று அரச ஆதரவு சக்திகளால் பொது மக்களை நோக்கி கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.
அதையும் தண்டி மக்கள் போராட்டத்தினை நடத்தியுள்ளனர் .
மேற்படி போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவினை தெரிவித்து பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டார். அதே போல் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment