குமரி மாவட்டம் நித்திரவிளையை அடுத்த சமத்துவபுரம், காஞ்சிரவிளையைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 25).
கூலித்தொழிலாளி இவரது மனைவி சவுமியா (22). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
ராஜேஷ் சில நாட்களாக ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் ஊரிலேயே சுற்றித்திரிந்தார். இதனால் குடும்பச் செலவுக்கு மனைவியின் நகைகளை விற்று செலவழித்து வந்தார்.திருமணத்தின் போது 20 நகைகளும் ரூ.1 லட்சமும் ரொக்கமும் வரதட்சணையாக வழங்கி உள்ளனர்.
ராஜேஷ் சமீபத்தில் பணம் இன்றி பலரிடமும் கடன் வாங்கினார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் தவிப்புக்கு ஆளான ராஜேஷ் மனைவியிடம் சென்று அவரது நகைகளை கேட்டார். இதில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இன்று காலையிலும் ராஜேஷ் மனைவி சவுமியாவிடம் அவரது நகைகளை கேட்டு தகராறு செய்தார். அவர் நகைகளை கொடுக்க மறுக்கவே அவரது கழுத்தில் கிடந்த செயினை பறிக்க முயன்றார். இதை சவுமியா தடுத்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் அருகில் இருந்த அரிவாளை எடுத்து சவுமியாவை சரமாரியாக வெட்டினார். இதில் சவுமியா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சவுமியாவின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் ராஜேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:
Post a Comment