February 9, 2015

அகதிகளை ஏற்க சிறிலங்கா தயாரில்லை - இந்திய ஊடகம்!

தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகளை ஏற்றுக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.சிறிலங்கா அரசாங்கத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஈழ ஏதிலிகளை நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
எனினும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியேற்றியதன் பின்னரே தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளை ஏற்றுக் கொள்ள முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் அகதிகளை மீளழைக்கும் திட்டத்தை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரே முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment