February 9, 2015

முல்லைத்தீவில் தமிழரசுக்கட்சிக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!

தமிழரசுக்கட்சிக்கு ஆதவு திரட்ட முல்லைதீவு சென்றிருந்த அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா மக்களது கடுமையான எதிர்ப்பினை சந்தித்து
திரும்பியுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தினில் கட்சி தலைமைகளான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டமை,மைத்திரிக்கு நிபந்தனையற்று ஆதரவு வழங்கியமை மீள்குடியமர்வு,கைதிகள் விடுதலை உள்ளிட்ட விடயங்களினில் கையாலாகாத நிலை ஆகியவற்றினை பற்றி மக்கள் துருவி துருவி கேள்வி எழுப்பினர் என தெரியவருகிறது.
தமிழரசுக்கட்சிக்கு ஆதவு திரட்ட முல்லைதீவு சென்றிருந்த அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா மக்களது கடுமையான எதிர்ப்பினை சந்தித்து திரும்பியுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தினில் கட்சி தலைமைகளான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டமை,மைத்திரிக்கு நிபந்தனையற்று ஆதரவு வழங்கியமை மீள்குடியமர்வு,கைதிகள் விடுதலை உள்ளிட்ட விடயங்களினில் கையாலாகாத நிலை ஆகியவற்றினை பற்றி மக்கள் துருவி துருவி கேள்வி எழுப்பினர் என தெரியவருகிறது.

முல்லைதீவில் இரு இடங்களினில் கூட்டங்களை நடாத்த மாவை சேனாதிராசா முற்பட்டிருந்தார். எனினும் மக்களது கடும் எதிர்ப்பினையடுத்து ஒரு கூட்டமே நடந்திருந்தது. அதிலும் கடுமையாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை விமர்ச்சித்த மக்கள் வெளிநடப்பு செய்துவிடனர் வெறும் ஜம்பதிற்கும் குறைவானவர்களுடன் கூட்டத்தை ஒப்பிற்கு நடத்தியதாக தெரியவருகின்றது.

இலங்கையின் சுதந்திர தினத்தினில் கட்சி தலைமைகளான திரு இரா- சம்பந்தன் மற்றும் திரு எம் ஏ - சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டமை,மைத்திரிபாலா அரசுக்கு நிபந்தனையற்று ஆதரவு வழங்கியமை தொடர்பினில் மக்களிடையே கடுமையான எதிர்ப்பலைகள் கிளர்ந்துள்ள நிலையினில் அதனை எதிர்கொள்ளமுடியாத ஒரு சூழலுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இதர தலைமைகள் தள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment