February 25, 2015

தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணையை உடனடியாக நடத்தக் கோரி யேர்மனி பேர்லின் நகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு!

இலங்­கையில் இடம்­பெற்ற இன அழிப்புத் தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட போர்க் குற்ற விசா­ரணை அறிக்கை மார்ச் மாதம் நடைபெறவிருக்கும்
ஐ.நா. மனித உரிமை அமர்வில் கண்­டிப்­பாக சமர்ப்­பிக்­கப்­ப­டு­மென எதிர்பார்ப்பு தமிழ் மக்­கள் மத்தியில் நிலவியிருந்தது .


இருப்­பினும் இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள ஆட்சி மாற்றம் உள்­ளிட்ட சில விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இலங்கை தொடர்­பான அறிக்­
கையை வெளி­யி­டு­வதை மேலும் ஆறு மாதம் ஒத்­தி­வைக்க ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் முடி­வெ­டுத்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.
அந்தவகையில் ஐ.நா.வின் விசாரணை அறிக்­கையை கண்­டிப்­பாக மார்ச் இல் நடைபெற இருக்கும் ஐ.நா. மனித உரிமை அமர்வில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்­டு­மென நேற்றைய தினம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழகத்திலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முனெடுக்கப்பட்டன . அவ் வகையில் பேர்லின் நகரிலும் யேர்மனிய வெளிவிவகார அமைச்சுக்கு முன்னர் கவனயீர்ப்பு நடைபெற்றது . நிகழ்வின் இறுதியில் மனுவும் கையளிக்கப்பட்டது. அத்தோடு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த சுமந்திரன் புலம்பெயர் தமிழர்களைப் பற்றியும் அவர்களின் விடுதலைபோராட்டங்களை பற்றியும் இழிவாக பேசியதை கண்டித்து மக்கள் விசனம் கொண்டதை காணக்கூடியதாக இருந்தது .





No comments:

Post a Comment