February 25, 2015

கழிவு ஓயில் கலந்த குடிநீரை வலி.வடக்கு பிரதேசசபை வழங்குவதாக பிரதேச செயலகத்தினில் முறைப்பாடு

கழிவு ஓயில் கலந்த குடிநீரை வலி.வடக்கு பிரதேசசபை வழங்குவதாக பிரதேச செயலகத்தினில் முறைப்பாடு செய்த மூத்த போராளியொருவர் தாக்கப்பட்டுள்ளார். வலி.வடக்கு பிரதேசசபை தலைவர் சுகிர்தனால் தாக்குண்ட அவரை சக பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர்.


இது தொடர்பினில் மேலும் தெரியவருகையினில் வலிகாமம பிரதேசத்தில் பல கிணறுகளில் கழிவு எண்ணெய் கசிவு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அக்கிணறுகளின் நீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று வெதுப்பகங்கள், உணவக உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதார வைத்தியதிகாரி பணிமனை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அதனை மீறி வலி.வடக்கு பிரதேசசபை அக்கிணறுகளிலிருந்தே குடிநீரை வழங்குவதாக குறித்த முன்னாள் போராளி முறைப்பாடு செய்துள்ளார். 60 வயதான குறித்த போராளி பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே வலி.வடக்கு பிரதேசசபை தலைவர் சுகிர்தனால் தாக்குண்டுள்ளார். புனர்வாழ்விலிருந்து அண்மையிலேயே விடுவிக்கப்பட்ட அவரது மகனும் அண்மையிலேயே புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், அப்பகுதி மக்களுக்கும் பாடசாலைகளுக்கும் தேவையான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்துக்கு உட்பட்ட சுதுமலை, மானிப்பாய், மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய் ஆகிய இடங்களிலுள்ள சில கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்திருப்பதாக மக்கள் செய்த முறைப்பாட்டையடுத்து, ஒரு சில கிணறுகள் சுகாதார தரப்பினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது, சுதுமலை வடக்கு, மாசியப்பிட்டி ஆகிய இடங்களிலுள்ள 28க்கும் மேற்பட்ட கிணறுகளில் கழிவு எண்ணைய் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, அக்கிணறுகளின் நீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்திய சுகாதார வைத்தியதிகாரி பணிமனை, பாதிக்கப்பட்ட இடங்களில் குடிநீர் தாங்கிகள் வைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள 3 பாடசாலைகளுக்கும் இவ்வாறு குடிநீர் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment