தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினக் கூட்டம் நாளை புதன்கிழமை (10.12.2014) காலை 11
மணி முதல் கிளிநொச்சிக் கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாகக் கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தமிழ்.சி.என்.என் இற்குத் தெரிவித்தார்.
இதன் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பிரபல அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் கருத்துரைகள வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
No comments:
Post a Comment