October 9, 2015

கிளிநொச்சி விபத்தில் காயமடைந்த இளம் குடும்பஸ்தர் மரணம்!

கிளிநொச்சியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் – பஸ் விபத்தில் படுகாயமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த அரச ஊழியர் சிகிச்சை பயளிக்காத நிலையில நேற்று வியாழக்கிழமை மாலை மரணமானார்.


நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் நெடுந்தீவைச் சேர்ந்த குழந்தைவேலு மோகனதாஸ் (வயது 29) என்ற ஒரு பிள்ளையின் தந்தையான குடும்பஸ்தரே மரணமானவராவார்.

கடந்த முதலாம் திகதி தனது சகோதரியின் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சி சென்றுள்ளார். இரணைமடுச் சந்தியில் திரும்புவதற்காக வாகனங்களை விலத்தவிட்டு காத்திருந்த நிலையில் பின்னால் வேகமாக வந்த காரைநகர் சாலைக்குரிய இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் மோதித் தள்ளியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்படடு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும் அவர் மரணமானார்.

மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment