May 18, 2016

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் !

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் இடம்பெறவுள்ளது.

இந்த அஞ்சலி நிகழ்வு ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளை புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு ஐரோப்பிய ஆலோசனை சபை முன்றலில் (Orangerie parc அருகில்) ஆரம்பமாகவுள்ளது.
ஸ்ரீலங்கா அரசினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தி, நீதியைப் பெற்றுத் தரவும், அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவும்,
தமிழ் மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைகளை ஏற்றுக்கொள்ளக் கோரியும் நடைபெறவுள்ள கவனயீர்ப்பு நிகழ்வில், வரலாற்றுக் கடமையை உணர்ந்து அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment