திருகோணமலையில் பட்டப்பகலில் தமிழ் யுவதி ஒருவர் அடையாளம் தெரியாத சிலரால் வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
திருகோணமலை நகரில் அமைந்துள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய 25 வயதான யுவதியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை நிறச் சிற்றூர்தியில் ஒன்றில் வந்த சிலர் நிறுவனத்தில் காவலாளியை தாக்கி, யுவதியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
கடத்திச் செல்லப்பட்ட யுவதி உவர்மலை பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment