எம்இனத்தை அழித்த அரக்கனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டிப்பதற்காக அயராத முயற்சியின் காரணமாக இன்று சூழல் மாறியுள்ளது இன்னிலையில் நாளை முருகுதாசன் திடலில்
பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு ஈழவிடுதலையினை முன்னெடுக்கவேண்டும்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு ஈழவிடுதலையினை முன்னெடுக்கவேண்டும்.
தாய் தமிழகம் இன்று உங்களுக்கு ஆதரவாகவும் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எங்களால் முடிந்தளவில் 150 ற்கு மேற்பட்ட தமிழ் அமைப்புக்கள் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் 24 ஆம் நாள் சென்னையில் நாங்கள் நடத்துகின்றோம்.
தாயகத்திலும் , தமிழகத்திலும் , புலத்திலும் ஒன்றிணைந்து போராடுவோம் .விடுதலைப் போராட்டத்துக்கு மாவீரர்களை கொடுத்த தமிழ் உறவுகளே , குடும்பம் குடும்பமாக ஐ.நா பேரணியில் பெரும்திரளாக கலந்து கொள்ளுங்கள் . எமக்கான தேசத்தை நாம் பெறுவதுக்கு தொடர்ந்து போராடுவோம் என ஐ.நா பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள்.
No comments:
Post a Comment