எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார
நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டமைப்பு நாளை கலந்துரையாடல்களை நடத்தவுள்ளது.
யாழ்ப்பாணத்தில்
மாவை சேனாதிராசாவும் வவுனியாவில் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் கிளிநொச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனென பிரச்சார ஏற்பாடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது போன்று மைத்திரிக்காதரவாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் 30 ம் திகதி யாழில் நடைபெறும் எதிரணியின் பொது பிரச்சார கூட்டத்தினில் கூட்டமைப்பின் தலைகள் மேடையேறவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
பிரச்சார நடவடிக்கைகளினை ஒருங்கிணைக்க ஏதுவாக கட்சி தலைவர் இரா.சம்பந்தன் 28 ம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே முல்லைதீவில் பிரச்சார நடவடிக்கைகளினை ஒருங்கிணைக்க பிரதி தவிசாளர் ஜெகநாதனிடம் கோரப்பட்ட போதும் இரு பிரதான வேட்பாளர்களையும் ஆதரிக்கப்போவதில்லையென கூறி மறுதலித்துள்ளார்.ஏற்கனவே மற்றொரு மாகாணசபை உறுப்பினர் இரவிகரனும் அதே போன்று மறுதலித்துள்ளதையடுத்து பொருத்தமான ஆளை தேடுவதாக கூறப்படுகின்றது.

No comments:
Post a Comment