November 26, 2014

போற்றப்பட வேண்டிய பண்பாடுகளாகட்டும் - தேசிய மாவீரர் பணிகள் செயலகம்!

அன்புக்குரிய தமிழீழ மக்களே!

எமது தாயகமாம் தமிழீழ நாட்டின் தேசிய நாட்களில் மாவீரர்நாள் மிக முக்கியமான நாளாகும்.  மாவீரர்நாள் என்பது தமிழீழத்தின் விடிவிற்காகவும், உயர்வுக்காகவும் உழைத்து, உயிரைத் தற்கொடையாக ஈந்து, இந்த மண்ணிற்கே உரமானவர்களினதும் எமது மூச்சுடன் கலந்துள்ளவர்களினதும் நினைவு நாளாகும்.

உங்கள் உயிரிலும் மேலான பிள்ளைகளும் எமது சக போராளிகளுமான இம்மாவீரர்களின் ஈகம், அவர்களின் உணர்வுகள், இலட்சியதாகம், கனவுகள் என்பன மறக்கப்பட முடியாதவையும், புனிதத்தன்மை வாய்ந்தவையுமாகும். காலங்காலமாக நினைவுகூர்ந்து என்றும் போற்றப்பட வேண்டியவையுமாகும்.
1989லிருந்து இன்று வரை இந்நாளை, முதற்களப்பலியான லெப்டினன்ட்; சங்;கரின் நினைவு நாளில் தமிழீழத்தில் துயிலுமில்லங்களிலும் புலம்பெயர் நாடுகளில் எம்மால் புனிதமாக அமைக்கப்பட்ட இடங்களிலும் கடைப்பிடித்து நடாத்திவருகின்றோம்.

இன்று எமக்குத் துயிலுமில்லங்களில்லை. எமது துயிலுமில்லங்களும், அதிலுள்ள விதைகுழிகள், நினைவுக்கற்கள் ஆகியனவும் எதிரியால் அழிக்கப்பட்டுவிட்;டன. ஆனால் எங்கள் மனதில் விதைக்கப்பட்ட உணர்வுகளை அவர்களால் அழிக்கமுடியவில்லை. என்றும் இவ்வுலகம் இருக்கும் வரை யாராலும் அழிக்கவே முடியாது.

இம்மாவீரர்களின் நினைவுகள் எம்மை வழி நடாத்தும். உந்துசக்தியாக என்றும் இருக்கும். மாவீரர்களினது இத்தகைய நினைவுகூரல் என்பது ஒரு நிகழ்ச்சியாக மட்டும் இருந்து விடாது எமது நாட்டு மக்களின் வரலாற்றுச் சுவடியாகவும் பண்பாட்டுக்குரியவையாகவும் வளர்ந்துவரல் வேண்டும்.

எமக்குரிய இந்த உயரிய நாளைத் தத்துவார்த்தமாகவும் உணர்வு பூர்வமாகவும் நிலை நாட்டுவதற்காக எமது தாயக மற்றும் புலம்பெயர் தமிழீழ மக்கள் அனைவரினதும் மனமுவந்த ஒருங்கிணைந்த பங்களிப்புகளை வேண்டி நிற்கின்றோம்.


'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

பணிமுதல்வர்,                                                           
தேசிய மாவீரர்  பணிகள் செயலகம்,                                          
அனைத்துலகத் தொடர்பகம்,                                                           
தமிழீழ விடுதலைப் புலிகள்                                                         
தமிழீழம்.

No comments:

Post a Comment