ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை எச்சரித்தாலும், சிறிலங்காவில் தஞ்சம் கோரியுள்ள பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்த்தானைச் சேர்ந்தவர்களை
நாடுகடத்தவிருப்பதாக சிறிலங்காவின் குடிவரவு – குடிப்பெயர்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் கட்டுப்பாட்டாளர் சூலாநந்தபேரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமது வலியுறுத்தலை மீறி சிறிலங்கா அரசாங்கம் நூற்றுக் கணக்கானவர்களை நாடுகடத்தி இருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவை குற்றம் சுமத்தி இருந்தது.
அத்துடன் தற்போது சிறிலங்காவில் தங்கியுள்ள அகதிகள் நாடுகடத்தப்படுவதை நிறுத்த வேண்டும் என்று நேற்று கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும் அகதிகளை நாடுகடத்தும் செயற்பாடுகளை தாம் இடைநிறுத்தப் போவதில்லை என்று குடிவரவு – குடிப்பெயர்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் சட்டங்களின் அடிப்படையிலேயே இந்த விடயத்தில் செயற்படுவதாகவும், இதற்கு எதிராக அகதிகள் பேரவை கருத்துக்களை வெளியிடக் கூடாது என்றும் சூலாநந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment